செய்திகள்
அமைச்சர் சி.வி.சண்முகம் மாணவி ஒருவருக்கு சைக்கிள் வழங்கிய காட்சி.

அதிமுக. சார்பில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்- சி.வி.சண்முகம் வழங்கினார்

Published On 2020-02-28 16:06 GMT   |   Update On 2020-02-28 16:06 GMT
காணை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் காணை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கி பொதுக்கூட்டம் காணை எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளரும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முத்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அருள் சரவணன், மாணவரணி செயலாளர் சுரே‌‌ஷ், இலக்கிய அணி செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட செயலாளரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி-சேலை, தையல் எந்திரம், சலவைப்பெட்டி, பாத்திரங்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள், கல்வி உபகரணங்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் பாசறை ஒன்றிய செயலாளர் வக்கீல் நாகராஜன், அத்தியூர்திருக்கை கிளை செயலாளர் பாரிவள்ளல், முன்னாள் தொகுதி இணை செயலாளர் ராமகிரு‌‌ஷ்ணன், வக்கீல் பிரிவு இணை செயலாளர் அரங்கநாதன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மல்லிகா, ஒன்றிய பேரவை துணைத்தலைவர் புருஷோத்தமன், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் தயாநிதி, வக்கீல்கள் பிரபாகரன், பர்குணன், ஊராட்சி செயலாளர்கள் ரவி, ஆறுமுகம், கிளை செயலாளர் திருமால், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News