செய்திகள்
கைது

தஞ்சை அருகே ரெயில்வே தண்டவாள இரும்பு கிளிப்புகளை திருடிய வாலிபர் கைது

Published On 2020-02-28 10:45 GMT   |   Update On 2020-02-28 10:45 GMT
தஞ்சை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே தண்டவாள இரும்பு கிளிப்புகளை திருடிய வாலிபரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏ.எஸ்.ஐ.பி.எப். மணிவண்ணன் தலைமையில் தலைமைக் காவலர்கள் சுரேஷ்குமார், ரத்தினகுமார் மற்றும் போலீசார் தஞ்சை அடுத்த பூதலூர்ஆலக்குடி இடையேயான ரெயில்வே தண்டவாள பகுதியில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வாலிபர் கையில் சாக்குப் பையுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்ததில் தண்டவாளங்களை இணைக்கப் பயன்படும் இரும்பிலான பேன்ட்ரோல் கிளிப்புகள் திருடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம் மேலப்புதூர் நடுத்தெருவை சேர்ந்த தயாள் குமார் மகன் வினோத் பிரசாத் (வயது 28) என்பதும், ரெயில்வே இரும்புப் பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வினோத் பிரசாத்தை கைது செய்து, அவரிடம் இருந்து தண்டவாள பேண்ட்ரோல் கிளிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல் அவர் வேறு எங்காவது ரெயில்வே பொருட்களை திருடி உள்ளாரா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News