செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

ராமநாதபுரம் வரும் முதல்வரை வரவேற்க திரண்டு வாருங்கள்- மணிகண்டன் எம்.எல்.ஏ. அழைப்பு

Published On 2020-02-28 10:05 GMT   |   Update On 2020-02-28 10:05 GMT
ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வரவேற்க திரண்டு வாருங்கள் என்று மணிகண்டன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் 1-ந் தேதி அம்மா பூங்கா அருகே ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் மாநில அமைச்சர்கள் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

விழாவிற்கான பிரம் மாண்ட மேடை அமைத்தல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயனாளிகள் அமர்வதற்காக பந்தல், கண்காட்சி அரங்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து மண்டபம் திருப்புல்லாணி ஒன்றியம் அ.தி.மு.க. நிர்வாகி களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் மணிகண்டன் தலைமையில் அவரது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

எனது பணிவான கோரிக்கையினை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்கொண்ட தீவிர முயற்சியினால் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரி அமைக்கப்படு கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வரலாறு காணாத வகையில் பிரம்மாண்டமான வர வேற்பு அளிக்க வேண்டும். இந்த சிறப்புமிக்க விழாவில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ராம்கோ முன்னாள் துணைத்தலைவர் தஞ்சி சுரேஷ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, துணை செயலாளர் பாக்கியநாதன், அவைத் தலைவர் உடையத்தேவன், ஊராட்சி செயலாளர்கள் சண்முகம் (திருப்புல்லாணி), சரவணன் (தாதனேந்தல்), பாண்டியன் (ரெகுநாதபுரம்), ஜானகி ராமன் (பெருங் குளம்) உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News