செய்திகள்
கோப்புப்படம்

புதுவையில் 46 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

Published On 2020-02-28 09:36 GMT   |   Update On 2020-02-28 09:36 GMT
புதுவையில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

பிளஸ்-2 தேர்வு வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. புதுவையில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வை 149 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 958 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்கு 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஆயிரத்து 933 பேர் மாணவிகள்.

பிளஸ்1 தேர்வில் 151 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 779 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 7 ஆயிரத்து 838 பேர் மாணவிகள். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வில் 299 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 521 பேர் எழுதுகின்றனர். இதில் 8 ஆயிரத்து 293 மாணவர்கள், 8 ஆயிரத்து 227 பேர் மாணவிகள். இவர்களுக்காக 48 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News