செய்திகள்
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

பெரம்பலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-27 17:13 GMT   |   Update On 2020-02-27 17:13 GMT
பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு (யு.எப்.பி.யு.) சார்பில் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரம்பலூர் கிளை பாரத ஸ்டேட் வங்கி தொழிலாளர்கள் சங்க தலைவர் சுஜீத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சந்திரசேகர், மனோகர், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வங்கி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் வழங்க வேண்டும். வாராக்கடனை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்சபுவனா வரவேற்றார். 

முடிவில் முரளிசந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News