செய்திகள்
குண்டுமல்லி

கரூர் மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-02-27 14:23 GMT   |   Update On 2020-02-27 14:23 GMT
கரூர் மாவட்டத்தில் விஷேச நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நடையனூர், முத்தனூர், கவுண்டன் பதூர், சேமங்கி, மரவாபாளையம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லைப்பூ, சென்டுமல்லி, அரளி,செவ் வந்தி, கனகாம்பரம், ரோஜா போன்ற வகைகளையும், மருவு, துளசி, கோழிக்கொண்டைப்பூ போன்ற தழை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான பைகளில் போட்டு வைக்கின்றனர். 

இந்த பூக்களை வாங்குவதற்கு வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல் பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி, தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் விலைக்கு வாங்கிச் சென்று விற்பனை பூக்களை கட்டி முழம் கணக்கிற்கு விற்பனை செய்கின்றனர்.

சிறிய மாலை, பெரிய மாலை என கட்டி சில்லரையாகவும், கோவில்மற்றும் கும்பாபிஷேகம், திருமண விஷேசங்களுக்கு மொத்தமாகவும் விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் குண்டு மல்லி பூ கிலோ ரூ.500-க்கும் முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.500-க்கும் அரளி ஒரு கிலோ ரூ.80-க்கும், சம்மங்கி ரூ.150, செவ்வந்தி பூ ரூ.120-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.140-க்கும் மேலும் கோழிக்கொண்டை ஒருக்கட்டு பூ ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.5-க்கும், வாங்கிச் சென்றனர். 

இந்த வாரம் குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.850, முல்லை பூ ரூ.850-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ஒருகிலோ ரூ.180-க்கும், சம்மங்கி ரூ.250-க்கும், செவ்வந்தி பூ ரூ.220-க்கும், கோழிக்கொண்டை ரூ.10-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.10-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.10க்கும் வாங்கிச் சென்றனர். திருமண நிகழ்ச்சிகள் மற்றும்கோவில் விஷேசங்கள், கிரகபிரவேசங்கள் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News