செய்திகள்
பிரியாணி

தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் 5000 பேருக்கு பிரியாணி வழங்கல்

Published On 2020-02-27 13:45 GMT   |   Update On 2020-02-27 13:45 GMT
தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் 5000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜு, சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி:

ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாநகராட்சி 11-வது வார்டு அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி முத்துகிருஷ்ணாபுரம் உருண்டை என் கோவில் மெயின்ரோட்டில் 5000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் செண்பக செல்வன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பாக்கியராஜ், வட்ட பிரதிநிதிகள் சனிக்குலாஸ், சாம்சன் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் செம்பூர் ராஜ்நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் வீரபாகு, மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் தனராஜ், அ.தி.மு.க. பிரமுகர்கள் கே.ஜே. பிரபாகர், வெயிலுமுத்து, பிராங்க்ளின் ஜோஸ், ஜான்சன் தேவராஜ், வட்ட செயலாளர் ராஜன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனப்பட்டு மற்றும் முனியப்பன், கொப்பரை சுப்ரமணியன், அருண், சகாயராஜா, பில்லா விக்னேஷ், வசந்த், சரவணபெருமாள் உட்பட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

முடிவில் அ.தி.மு.க. பிரமுகர்கள் சங்கர நாராயணன், செய்யது சம்சுதீன் ஆகியோர் நன்றி கூறினர்.
Tags:    

Similar News