செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-02-27 08:04 GMT   |   Update On 2020-02-27 09:11 GMT
ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை:

2012-ம் ஆண்டிலிருந்து 17-ம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி மற்றும் கைப்பந்து போட்டி நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.




பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வித்துறைக்கு எந்த அளவுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மாணவர்களின் விளையாட்டு நலனையும் அரசு கவனமாக கவனித்து வருகிறது.

மேலும் 2012-ல் இருந்து நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக பெயரில்லா கடிதம் வந்தது. அதுபற்றி விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என கண்டறியப்பட்டிருக்கிறது, இந்த தகவலையும் நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளோம்.

பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசு சிறப்பாக செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News