செய்திகள்
எச்.ராஜா

பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் தி.மு.க. சரண் அடைந்துள்ளது: எச்.ராஜா

Published On 2020-02-27 01:49 GMT   |   Update On 2020-02-27 01:49 GMT
பிராமணர் எதிர்ப்பு கொள்கை கொண்ட தி.மு.க., இப்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் சரண் சரணடைந்துள்ளதாக போளூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் எச்.ராஜா பேசினார்.
போளூர் :

பா.ஜ.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தினை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. இந்து விரோத கட்சி அல்ல என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்டாலின் பால்குடம் எடுக்கும் வரை தி.மு.க. இந்து விரோத கட்சிதான் என்பதை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். இந்து சமூக வலைதளங்கள் சிறப்பாக வேலை செய்து வருகின்றன. இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றும்படி அரசை, ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அப்படி செய்தால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாகி கட்சி கலைக்கப்படும். இதைத்தான் ஸ்டாலின் விரும்புகிறார்.



முஸ்லிம்களை தி.மு.க. வெறும் ஓட்டுவங்கியாகத்தான் பார்க்கிறது. ஆனால் பா.ஜ.க. இந்திய குடிமக்களாக பார்க்கிறது. இந்தியாவில் உள்ள மசூதி, மாதாகோவில் நிர்வாகம் அவர்களிடமே உள்ளது. அந்த அதிகாரத்தை இந்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் இந்து கோவில்களின் நிர்வாகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பிராமணர் எதிர்ப்பு கொள்கை கொண்ட தி.மு.க., இப்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் சரண் அடைந்துள்ளது. அவர் இவர்கள் கதையை முடித்து வைத்து விடுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News