செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்குமா?: பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் பிரேமலதா

Published On 2020-02-26 07:06 GMT   |   Update On 2020-02-26 09:01 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து புதிதாக 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான பணிகளில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி. ஆவதற்கு அ.தி.மு.க.வில் உள்ள முன்னணி நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

 
இந்த நிலையில் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி தங்களுக்கு ஒதுக்கப்படுமா? என்று காத்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி.பதவி கிடைக்குமா? என்பதை என்னால் உறுதிபட கூற முடியாது. இவையெல்லாம் தேர்தல் நேரத்தில் பேசப்பட்ட வி‌ஷயங்கள் தான்.

எனவே மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

Tags:    

Similar News