செய்திகள்
ஈச்சம்பழம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஈச்சம்பழம் சீசன் தொடங்கியது

Published On 2020-02-26 03:19 GMT   |   Update On 2020-02-26 03:22 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஈச்சம்பழம் சீசன் தொடங்கி உள்ளது. ஈச்சம் பழம் உடம்பில் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் சாப்பிடுவதற்கு அதிக ருசியாக இருக்கும்.
பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பிரப்பன் வலசை முதல் சுந்தரமுடையான் வரையிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும், தோப்புகளிலும் ஏராளமாக ஈச்சஞ்செடிகள் வளர்ந்து நிற்கின்றன.

ஆண்டுதோறும் ஈச்சஞ் செடிகளில் கோடை தொடங்கிவிட்டால் பழங்கள் கொத்துக்கொத்தாய் காய்க்க தொடங்கிவிடும். குறிப்பாக பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டும் ஈச்சஞ்செடிகளில் ஈச்சம் பழம் கொத்துக் கொத்தாய் காய்த்து குலுங்கும்.

தற்போது அங்கு ஈச்சம் பழம் சீசன் தொடங்கி உள்ளதை தொடர்ந்து மண்டபம் அருகே சுந்தரமுடையான், பால்குளம், பிரப்பன்வலசை, அரியமான் உள்ளிட்ட அந்த பகுதியை சுற்றி பல்வேறு கிராமங்களிலும், தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும் உள்ள ஈச்சஞ்செடிகளில் கொத்துக்கொத்தாய் ஈச்சம் பழங்கள் காய்த்து குலுங்க தொடங்கி உள்ளன. அவற்றை பொதுமக்கள், குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பறித்து சாப்பிடுகின்றனர்.

ஈச்சம் பழம் உடம்பில் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் சாப்பிடுவதற்கு அதிக ருசியாக இருக்கும். அது போல் பறவைகளும் ஈச்சம்பழத்தை இரையாக்க வந்து குவிகின்றன. 
Tags:    

Similar News