செய்திகள்
தளவாய் சுந்தரம்

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்- தளவாய் சுந்தரம் வழங்கினார்

Published On 2020-02-25 16:36 GMT   |   Update On 2020-02-25 16:36 GMT
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தளவாய் சுந்தரம் வழங்கினார்.

நாகர்கோவில்:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழா நேற்று 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. 24-ந்தேதி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன் கூறி இருந்தார். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 9 குழந்தைகள் பிறந்து உள்ளது. அவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார். மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்திராஜகுமாரி, முன்னாள் அமைச்சர் பச்சைமால், கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், அணி செயலாளர்கள் மனோகரன், சுகுமாரன், அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், நகர செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடக்க விழா நாகர்கோவில் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை பள்ளியில் இன்று நடந்தது.

விழாவிற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் முன்னிலை வகித்தார். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து 112 மாணவி களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.

Tags:    

Similar News