செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சிலை கடத்தல் வழக்கில் ஆவணங்கள் மாயம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-02-25 14:19 GMT   |   Update On 2020-02-25 14:19 GMT
சிலை கடத்தல் வழக்கில் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:

சிலை கடத்தல் தொடர்பான41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமான விவகாரம் குறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், சிலை கடத்தல் வழக்கில் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை மார்ச் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags:    

Similar News