செய்திகள்
கோப்புப்படம்

தஞ்சையில் 10-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்

Published On 2020-02-25 09:18 GMT   |   Update On 2020-02-25 09:18 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து தஞ்சையில் முஸ்லிம்களின் தொடர் போராட்டம் இன்று 10-வது நாளாக நீடிக்கிறது.
தஞ்சாவூர்:

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள பள்ளிவாசல் முன்பு கடந்த 9 நாட்களாக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைவிடாது நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று ஏராளமான முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்தனர். பின்னர் மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.

இன்று அது 10 நாளாக நீடித்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து பேசினர். அப்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர். இதனால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Tags:    

Similar News