செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

Published On 2020-02-25 06:21 GMT   |   Update On 2020-02-25 06:21 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
எடப்பாடி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் இருந்து சேலம் வந்தார். பின்னர் மாலையில் சேலம் 3 ரோடு அருகே வரலட்சுமி மகால் மைதானத்தில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்திற்கு சென்றார். அப்போது எடப்பாடியில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். மேலும் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் வாங்கி கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது வீட்டிற்கு சென்று தாயார் தவசாயி அம்மாளிடம் உடல் நலம் விசாரித்து, ஆசி பெற்றார்.
Tags:    

Similar News