செய்திகள்
எம்கே விஷ்ணுபிரசாத்

அ.தி.மு.க., தி.மு.க.வில் தலைமை இல்லாததால் தமிழகம் தவிக்கிறது - காங்கிரஸ் எம்.பி. பரபரப்பு பேச்சு

Published On 2020-02-25 05:38 GMT   |   Update On 2020-02-25 05:38 GMT
அ.தி.மு.க.விலும், தி.மு.க.விலும் தலைமை இல்லாததால் தமிழகமே அனாதையாக்கப்பட்டது போல் தவித்து வருகிறது என காங்கிரஸ் எம்பி எம்கே விஷ்ணுபிரசாத் கூறியுள்ளார்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரசால் வழங்கப்படுகிற நலத்திட்டங்களில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆரணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

நமது மாவட்டத்தில் ஏரி, குளங்கள் ஆழப்படுத்துவதில் ஊழல் நடந்துள்ளது. சாலையோரங்களில் கசிவுநீர் குட்டைகள் அமைக்காமலேயே பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமலேயே பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. ஊராட்சி செயலாளர்களை மட்டும் பணியிடை நீக்கம் செய்கிறார்கள்.

அனைத்து வங்கிகளிலும் மத்திய அரசு, சிறு வியாபாரிகள், நெசவாளர்களுக்ககாக கடன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் கடன் வழங்கப்படுவதில்லை.

அ.தி.மு.க.விலும், தி.மு.க.விலும் தலைமை இல்லாததால் தமிழகமே அனாதையாக்கப்பட்டது போல் தவித்து வருகிறது.



இவற்றையெல்லாம் முறியடிக்க தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகளுக்கு காப்பீடு அட்டை உள்ளதா என கேட்கிறார்கள். அரசு இலவசமாக உயர் சிகிச்சை செய்ய வேண்டும். டாஸ்மாக் மதுவால் தள்ளாடுபவர்களால்தான் இந்த அரசு நிற்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News