செய்திகள்
கோப்பு படம்

கம்பத்தில் 600 அடி நீள தேசிய கொடியுடன் இஸ்லாமியர்கள் ஊர்வலம்

Published On 2020-02-24 12:23 GMT   |   Update On 2020-02-24 12:23 GMT
கம்பத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு 600 அடி நீள தேசிய கொடியுடன் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
கம்பம்:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களும், பேரணி, பொதுகூட்டம் போன்றவையும் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் கம்பத்தில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் நிறுவனர் தடா ரகீம் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் 600 அடி நீள தேசிய கொடியை ஏந்தி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜா முகமது முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பாபா பத்ருதீன் தொடங்கி வைத்தார்.

கம்பம் வாவேர் பள்ளிவாசலில் தொடங்கிய ஊர்வலம், ஓடைக்கரை தெரு, போக்குவரத்து சிக்னல், கம்பம் மெட்டு சாலை, புது பள்ளிவாசல் வழியாக சென்று பாவலர் படிப்பகத்தில் நிறைவு பெற்றது.

இந்த ஊர்வலத்தில் கம்பம் மற்றும் உத்தமபாளையம் வட்டார அனைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள், நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News