செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: தண்டனை பெற்ற 3 பேர் மேல்முறையீடு

Published On 2020-02-24 09:11 GMT   |   Update On 2020-02-24 09:11 GMT
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற 3 பேர் மேல்முறையீட்டு மனுக்களுக்கு அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கடந்த 3-ந்தேதி சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

5 ஆண்டு சிறை தண்டனையை விதித்ததை எதிர்த்து உமாபதி என்பவர் ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், ஐந்து ஆண்டு தண்டனையை பெற்ற லிப்ட் ஆப்ரேட்டர் தீனதயாளன், வீட்டு வேலை செய்த ஜெயராமன் ஆகிய இருவர் தண்டனையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

3 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை எல்லாம் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர், 3 பேரது மேல் முறையீட்டு மனுக்களுக்கு அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News