செய்திகள்
ஜெயலலிதா

ஜெயலலிதா பிறந்தநாள்- பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி

Published On 2020-02-24 04:11 GMT   |   Update On 2020-02-24 08:20 GMT
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. 

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப். 24ம் தேதியன்று, அனைத்து அரசுப் பள்ளிகள் அற்றும் அரசு அலுவலகங்களில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News