செய்திகள்
வெளிநடப்பு செய்த திமுக

வேளாண் மண்டலம் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு

Published On 2020-02-20 09:52 GMT   |   Update On 2020-02-20 09:52 GMT
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. இன்று வெளிநடப்பு செய்தது.
சென்னை:

காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். இதுதொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். 

இதற்கிடையே, பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, இந்த சட்ட மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆனால், வேளாண் மண்டல மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாமல் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது.
 
இந்நிலையில்,  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
Tags:    

Similar News