செய்திகள்
பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதி விபத்து

பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதி விபத்து - 9 பேர் பலி

Published On 2020-02-20 00:47 GMT   |   Update On 2020-02-20 02:43 GMT
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பேருந்தும் கண்டென்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் 9 பேர் பலியானார்கள்.
திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.  இந்நெடுஞ்சாலையில் டைல்ஸ் கற்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி விரைந்து சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் எதிரே வந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது, கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.   இதில் மூன்று பெண்கள் அடங்குவர்.

மேலும் பலர் காயமடைந்தனர்.  இதுகுறித்து அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினர்க்கும் தகவல் அளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் விபத்தில் காயமடைந்த நிலையில் உள்ளவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.   

மேலும் டைல்ஸ் கற்கள் ஏற்றிக் கொண்டு வந்த கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியதால் பயணிகளை மீட்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மேலும் இதே போல் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து சென்று கொண்டு இருந்தது.  இந்த பேருந்து எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பயணம் செய்த நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் 5  பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  மேலும் 26 பேர் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
Tags:    

Similar News