செய்திகள்
செனனை தலைமை செயலகம்

வேளாண் பாதுகாப்பு மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்

Published On 2020-02-19 12:27 GMT   |   Update On 2020-02-19 12:27 GMT
காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை:

சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9-ந்தேதி கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாக கூறினார்.

இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் தொடங்கியது. அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
Tags:    

Similar News