செய்திகள்
விபத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்து: தேமுதிக செயலாளர் - கல்லூரி மாணவர் பலி

Published On 2020-02-18 12:02 GMT   |   Update On 2020-02-18 12:02 GMT
கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் மற்றும் கல்லூரி மாணவர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிணத்துக்கடவு:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூர் போடி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 36).இவர் பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராக இருந்தார்.

சந்திரசேகர் தனது சொகுசு காரில் நண்பர்களான பொள்ளாச்சி சக்திநகரை சேர்ந்த செந்தில்குமார் (36), கட்டபொம்மன் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோர் (19) டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த அருண், மணிகண்டன் ஆகியோருடன் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள நண்பர்களுக்கு காலண்டர், டைரி கொடுப்பதற்க்காக சென்றார்.பின்னர்அங்கு நண்பர்களுக்கு டைரி,காலண்டர்கள் கொடுத்துவிட்டு அங்கு உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு அனைவரும் புறப்பட்டனர். செல்லும் வழியில் கிணத்துக் கடவில் உள்ளநண்பர்களுக்கு டைரி கொடுக்க சென்றனர். அப்போது காரில் இருந்த அருண், மணிகண்டன் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாக காரில் இருந்து தாமரைகுளத்தில் இறங்கினர்.

பின்னர் சந்திரசேகர், செந்தில்குமார், கிஷோர் ஆகிய 3 பேரும் கிணத்துக்கடவுக்கு சென்று விட்டு இரவு 12.45 மணியளவில் கல்லாங்காட்டுபுதூர் அருகே சென்ற போது திடீரென கார் கட்டுப்பாடை இழந்து ரோட்டோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது. இதில் விபத்தில் கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காரை ஓட்டிவந்த சந்திரசேகர், செந்தில்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த தகவல் கிடைத்ததும் கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முரளி, சப் -இன்ஸ்பெக்டர்கள் ஜவகர்குமார்,சேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரில் சிக்கி உயிருக்கு போராடிய சந்திரசேகர், செந்தில்குமார் ஆகியோரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திர சேகரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்தசெந்தில்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News