செய்திகள்
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால் அருகே முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-18 10:42 GMT   |   Update On 2020-02-18 10:42 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து காரைக்கால் அருகே முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்:

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை, வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் தடியடி நடத்தினர். சென்னையில் முஸ்லிம்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் காரைக்காலை அடுத்த திருமலை ராயன்பட்டினம் இஸ்லாமிய குழுமம் சார்பில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இஸ்லாமிய குழுமத்தின் மூத்த நிர்வாகி ஹாஜா நஜிமுதீன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மவுலவி மீரா மொஹைதீன், இஸ்மாயில், ஏகத்துவ பிரச்சார மைய மாநில தலைவர் முஹம்மது சலீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, சுல்தான் கெளஸ் மாலிக் அனைவரையும் வரவேற்றார், முடிவில் முஹம்மது ஆசிக் நன்றி கூறினார்.
Tags:    

Similar News