செய்திகள்
கல்லூரி மாணவி மாயம்

கோவையில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் மாயம்

Published On 2020-02-18 09:35 GMT   |   Update On 2020-02-18 09:35 GMT
கோவையில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை வடமதுரை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் இந்துமதி(17). இவர் வட்ட மலை பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று தனது உறவினருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது அங்கு தனது உறவினரிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார்.

ஆனால் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

கோவை சின்ன தடாகத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகள் சினேகா(14). சம்பவத்தன்று வேலுசாமி தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். சினேகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலுசாமி மாலையில் வீட்டிற்கு வந்தபோது மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மனைவி ரெகானா. இவர்களுக்கு 1 குழந்தை உள்ளது.

சதாம் உசேன் அந்த பகுதியில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சதாம்உசேன் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சதாம் உசேனின் வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சதாம் உசேனின் தங்கை இதுகுறித்து சதாம் உசேனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அவர் வீட்டில் வந்து பார்த்தார். அப்போது வீட்டில் குழந்தை மட்டும் இருந்தது. ரெகானாவை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெகானாவை தேடி வருகின்றனர்.

கோவை கணியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ஜெயலட்சுமி(26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ஜெயலட்சுமி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சேகர் அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயலட்சுமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News