செய்திகள்
கோப்புப்படம்

கும்பகோணத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்- 35 பேர் மீது வழக்கு

Published On 2020-02-17 10:01 GMT   |   Update On 2020-02-17 10:01 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கும்பகோணம்:

குடியுரிமை திருத்த சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணத்தில் உச்சி பிள்ளையார் கோயில் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் இப்ராகிம் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் சிக்கந்தர் உள்பட 20பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News