செய்திகள்
இல கணேசன்

முஸ்லிம்கள் போராட்ட பின்னணியில் தி.மு.க. உள்ளது: இல.கணேசன் குற்றச்சாட்டு

Published On 2020-02-17 02:12 GMT   |   Update On 2020-02-17 02:12 GMT
பல்வேறு முறையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது என்று தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை :

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஓம் சக்தி விநாயகர் கோவிலில் பா.ஜ.க. மத்திய சென்னை(கிழக்கு) மாவட்டம் சார்பில் ஏழைகளுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர். இதைத்தொடர்ந்து இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுக்க கலந்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படும். முறையான அறிவிப்பு ஒரு வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது. முஸ்லிம்கள் போராட்டத்தால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க தமிழக அரசு 6 உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது பாராட்டுக்குறியது. பல்வேறு முறையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News