செய்திகள்
கோப்பு படம்

மணல் கடத்தல்-லாட்டரி விற்பனை புகார்: பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் அதிரடி மாற்றம்

Published On 2020-02-15 14:02 GMT   |   Update On 2020-02-15 14:02 GMT
மணல் கடத்தல், லாட்டரி விற்பனை தடுக்கும் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்ததாக புகாரை கூறப்பட்டதையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் ராம்ஜிநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பையா, நவல்பட்டு போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் நேற்று அதிரடியாக அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் 2 பேருக்கும் உடனடியாக மாற்று பணி வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயராமனும் அங்கிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். இந்த 3 பேர் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் வந்ததால் டி.ஐ.ஜி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.

3 இன்ஸ்பெக்டர்களும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பணிகளில் மெத்தனமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக மணல் கடத்தல், லாட்டரி விற்பனை போன்றவற்றை தடுக்கும் பணிகளை மேற்கொள்ளாமலும், தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் மீது புகார்கள் வந்துள்ளது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News