செய்திகள்
பாஜக

5 மாத அரிசி பணம் கேட்டு தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டம்- பாரதீய ஜனதா அறிவிப்பு

Published On 2020-02-12 17:30 GMT   |   Update On 2020-02-12 17:30 GMT
ஏழை மக்களுக்கு அரிசிக்கு பதில் பணம் வழங்குவோம் என்று கூறி கடந்த 5 மாதங்களாக வங்கியில் பணம் செலுத்தாததை கண்டித்து பாஜக சார்பில் 16ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
புதுச்சேரி:

பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் அரசின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக தொடர்ந்து எழை மக்களுக்கு நலத்திட்டங்களை அளிப்பது முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

அரசு தொடர்ந்து ஏழை மக்களுக்கு அரிசிக்கு பதில் பணம் வழங்குவோம் என்று கூறி கடந்த 5 மாதங்களாக வங்கியில் பணம் செலுத்தவில்லை. எனவே உடனடியாக 5 மாதத்திற்காக தொகை ரூ.3 ஆயிரம்  வங்கியில் செலுத்த வலியுறுத்தியும், புதுவை மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் குப்பை வரியை கண்டித்தும், குண்டும், குழியுமாக உள்ள  சாலைகளின் சீர்கேட்டை கண்டித்தும் 30 தொகுதிகளிலும், தொகுதி தலைவர்கள் தலைமையில் வருகிற 16-ந்தேதி அன்று காலை ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும்.

ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில்  கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   
Tags:    

Similar News