செய்திகள்
நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை- நிர்மலா சீதாராமன்

Published On 2020-02-08 12:48 GMT   |   Update On 2020-02-08 12:48 GMT
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப் படவில்லை என தெரிவித்தார்.
சென்னை:

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்றார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. எந்த மாநிலத்திற்கு என்றும் தனியாக நிலுவைத் தொகை வைக்கவில்லை. விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும். விவசாயிகளுக்கான நிதி உதவிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்கத் திட்டம்; எத்தனை சதவீத பங்குகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மாநில அரசுகள் ஒத்துழைத்தால் ஜிஎஸ்டி வரியில் பெட்ரோல், டீசல் ஆகியவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News