செய்திகள்
வைகை அணை

வைகை அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2020-02-07 08:16 GMT   |   Update On 2020-02-07 08:16 GMT
நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கூடலூர்:

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழையின்றி வரத்து நின்றதாலும் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் 50.39 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லை.

நேற்று வரை 1190 கன அடி நீர் பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக சரிந்துள்ளது. 95 கன அடி நீர் வருகிற நிலையில் 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 111.02 அடி. 7 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
Tags:    

Similar News