செய்திகள்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு- சிறப்பு குழு அமைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

Published On 2020-02-07 03:49 GMT   |   Update On 2020-02-07 03:49 GMT
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணையை தொடர சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப்2ஏ தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றவர்கள் என 32 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தரகர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தோண்டத்தோண்ட புதிய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில் டிஎஸ்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசரிக்க சிபிசிஐடி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எஸ்.பி. மல்லிகா தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முறைகேடுகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாவதால் தனி குழு அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News