செய்திகள்
கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்த தர்ணா போராட்டம்

மறைமுக தேர்தலில் முறைகேடு- கோவில்பட்டியில் சாலையில் அமர்ந்து கனிமொழி எம்.பி. தர்ணா

Published On 2020-01-30 07:58 GMT   |   Update On 2020-01-30 07:59 GMT
கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, கனிமொழி எம்பி தலைமையில் திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். மொத்தம் உள்ள 19 உறுப்பினர்களில் 10 பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும், 9 பேர் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், 10 உறுப்பினர்கள் தங்களுடன் இருக்கும்போது எப்படி அதிமுக வெற்றி பெற முடியும்? என திமுக தரப்பு கேள்வி எழுப்பியது. 

இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, மறைமுகத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின்படியே முடிவை அறிவித்ததாக கூறினார்.

இந்த பதிலில் திருப்தி அடையாத திமுக உறுப்பினர்கள் ஒன்றிய அலுவலகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கனிமொழி எம்.பி. தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மறுதேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் முறைகேடாக அதிமுக வெற்றிப் பெற்றிருப்பதாக கூறிய கனிமொழி, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News