செய்திகள்
மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் ஆளுநர்

தியாகிகள் தினம்- மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை

Published On 2020-01-30 03:47 GMT   |   Update On 2020-01-30 03:47 GMT
மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.
சென்னை:

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையிலும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி, தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

அவ்வகையில் மகாத்மா காந்தியின் 72-வது நினைவு தினமான இன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அவரது உருவப்படங்களும் ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.



சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. சிலைக்கு அருகில் மகாத்மா காந்தி உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News