செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு 18 புதிய வாகனங்கள்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Published On 2020-01-29 08:01 GMT   |   Update On 2020-01-29 08:04 GMT
பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு 18 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை:

பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 18 வாகனங்களை நீர்வள ஆதாரத்துறையின் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்களின் பயன் பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 5 அலுவலர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட ஸ்காச் தங்க விருதினை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News