செய்திகள்
கண்பரிசோதனை நடைபெற்ற காட்சி

பெரம்பலூரில் கண் பரிசோதனை முகாம்

Published On 2020-01-28 18:02 GMT   |   Update On 2020-01-28 18:02 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
பெரம்பலூர்:

சாலை பாதுகாப்பு வார விழாவின் இறுதி நாளான நேற்று பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமினை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடத்தியது.

இதற்கு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் மைதிலி, மோட்டார் போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் பரிசோதனை முகாமினை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) மலர்விழி தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். கண் மருத்துவர்கள் குழுவினரால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News