செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை

Published On 2020-01-28 11:52 GMT   |   Update On 2020-01-28 11:52 GMT
சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து நிர்வகிப்பது தொடர்பாக, அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தியது.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை உயர்கல்வி நிறுவனமாகவும், மற்றொன்றை பல்கலைக்கழகமாகவும் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து நிர்வகிப்பது குறித்தும், இதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது.

இம்மாத துவக்கத்தில் இதேபோல் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது. மாநிலத்தின் கொள்கை சார்ந்த விஷயங்கள் மற்றும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். 
Tags:    

Similar News