செய்திகள்
கைது

வியாசர்பாடி, ஓட்டேரி, ஆதம்பாக்கத்தில் கஞ்சா-போதைப் பொருள் விற்ற 12 பேர் கைது

Published On 2020-01-25 09:17 GMT   |   Update On 2020-01-25 09:17 GMT
வியாசர்பாடி, ஓட்டேரி, ஆதம்பாக்கத்தில் கஞ்சா-போதைப் பொருள் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை நகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வியாசர்பாடி கூட்ஸ் ஷெட் ரோடு அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாசர்பாடி போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சுபாஷ் (27), கரண் (22), சீனு (24), செல்வகுமார் (31) ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல் நன்மங்கலம் இந்திராநகரில் கஞ்சா விற்ற சத்திய நாராயணன் (24), கிருஷ்ணகுமார் (24), செல்வகுமார் (19) ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்ற 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் உள்ள குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 300 கிலோ குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதை பதுக்கி வைத்திருந்ததாக கணேசன் (52), வரதராஜ் (42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் போதை மாத்திரை விற்பனை செய்த சுகுமார் (45), வசந்தி (35), ஜீவா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 68 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News