செய்திகள்
இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.247 கோடி- நிர்வாக இயக்குனர் தகவல்

Published On 2020-01-25 03:29 GMT   |   Update On 2020-01-25 03:29 GMT
இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.247 கோடியாக உயர்ந்துள்ளது என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சத்ரு தெரிவித்தார்.
சென்னை:

இந்தியன் வங்கியின் 3-ம் காலாண்டு (அக்டோபர்-டிசம்பர் 2019) நிதிநிலை அறிக்கை குறித்து, வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சத்ரு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியன் வங்கியின் மொத்த வணிகம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி அதிகரித்து உள்ளது. இது எங்கள் வங்கிக்கு கிடைத்த மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

கடந்த ஓராண்டில் வங்கியின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு எண்ணிக்கை 10 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. வங்கியின் மொத்த லாபம் 67 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.1,919 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் நிகர லாபம் ரூ.247 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 62 சதவீதம் அதிகரித்து உள்ளது. வங்கியின் வராக்கடன் அதிகரிக்கவில்லை. தொடர்ந்து 7.2 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது.

வீட்டு கடன், வாகனக்கடன் உள்பட சில்லரை கடன்கள் 27 சதவீதமும், விவசாயிகளுக்கான கடன் 13 சதவீதமும், சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் 19 சதவீதமும் கடந்த ஆண்டில் கூடுதலாக வழங்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது இந்தியன் வங்கி செயல் இயக்குனர்கள் வி.வி.செனாய், எம்.கே.பட்டாச்சார்யா, பொது மேலாளர் பி.ஏ.கிரு‌‌ஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News