செய்திகள்
கோப்பு படம்

பவானி அருகே ஆற்றில் குளிக்க சென்ற லாரி டிரைவர் மூழ்கி பலி

Published On 2020-01-23 12:45 GMT   |   Update On 2020-01-23 12:45 GMT
பவானி அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற லாரி டிரைவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

சித்தோடு:

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி, தபால் தந்தி காலனி பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் மகன் டிரைவர் நாகராஜ் (வயது 30) மற்றும் உரிமையாளர் முருகன் ஆகிய இருவரும் வந்து கொண்டு இருந்துள்ளனர்.

கடந்த 19-ம் தேதி அதிகாலை பவானி, லட்சுமிநகர், சேலம்-கோவை பைபாஸ் காவிரி ஆற்று பாலம் பகுதியில் குளித்து வருவதாக கூறி நாகராஜ் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் நாகராஜ் வராததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர் உரிமையாளர் முருகன் லாரியை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி சென்று நாகராஜ் வீட்டில் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை காவிரி ஆற்றின் கரையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து லாரி உரிமையாளர் முருகன் மற்றும் நாகராஜ் உறவினர்கள் சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்து நாகராஜ் குறித்து தகவல் தெரிவிக்க காவிரி ஆற்றில் இறந்து கிடந்தது நாகராஜ் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் குளிக்கச் சென்று இறந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பின்னர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News