செய்திகள்
ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி

பெரியார் பேரணி குறித்து வெளியான செய்தி என்ன?: ‘துக்ளக்’ இதழில் மீண்டும் பிரசுரிக்க திட்டம்

Published On 2020-01-23 02:26 GMT   |   Update On 2020-01-23 02:26 GMT
1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியான அப்போதைய செய்தியை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் மறுபிரசுரம் செய்வது குறித்து யோசித்து வருவதாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை :

‘துக்ளக்’ பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ‘ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார்’ என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

இந்த நிலையில் பெரியார் குறித்து 1971-ம் ஆண்டு பெரியார் நடத்திய பேரணி குறித்து ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியான செய்தி மீண்டும் பிரசுரிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியான அப்போதைய செய்தியை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் மறுபிரசுரம் செய்து வெளியிட வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த புத்தகத்தை முழுமையாக மறுபிரசுரம் செய்து வெளியிட வேண்டிய தேவையில்லை என்று கருதுகிறோம். அதேவேளையில் சேலம் பெரியார் பேரணி நிகழ்வு தொடர்பான வி‌‌ஷயத்தை மட்டும் வருகிற ‘துக்ளக்’ இதழில் பிரசுரம் செய்வது குறித்து யோசித்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News