செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது எடுத்த படம்.

திருவாரூர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

Published On 2020-01-21 14:48 GMT   |   Update On 2020-01-21 14:48 GMT
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் 54 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திருவாரூர்:

சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் ,பெரியகோயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் மூலவர் வன்மீக நாதர் சன்னதி எதிரே இருந்த கொடிமரம் 98 ஆண்டுகள் பழமையானதால் பழுதடைந்தது. இதையடுத்து அந்த கொடிமரம் அகற்றப் பட்டு புதிதாக கொடிமரம் கேரளா மாநிலம் பலா என்ற மலைப்பகுதியில் இருந்து 54 அடி உயரம் கொண்ட தேக்கு மரம் கொண்டு வரப்பட்டு இழைக்கப்பட்டு பழைய கொடி மரம் இருந்த இடத்தில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து பூமிக்கடியில் நவ ரத்தினங்கள் வைக்கப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

விழாவில் தியாகராஜர் கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News