செய்திகள்
திருட்டு

வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2020-01-20 10:10 GMT   |   Update On 2020-01-20 10:10 GMT
சென்னை அசோக் நகரில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை:

சென்னை அசோக் நகர் புதூர் 13-வது தெருவில் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய வாலிபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்தனர்.

அவனது பையை சோதனை செய்தபோது அதில் செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அசோக் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் நெற்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், இரவு நேரங்களில் திறந்து கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவனிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவம்...

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வர ரெட்டி. சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் சென்னை நாவலூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் ‘சங்கராந்தி’ பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மகேஸ்வர ரெட்டி இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

பின்னர் கோயம்பேட்டில் இருந்து நாவலூர் செல்வதற்காக மாநகர பஸ்ஸில் ஏறினார். அப்போது பாக்கெட்டில் வைத்து இருந்த விலை உயர்ந்த செல்போனை காணாமல் மகேஸ்வர ரெட்டி அதிர்ச்சி அடைந்தார்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் செல்போனை ‘பிக்பாக்கெட்’ அடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News