செய்திகள்
ஆதரவற்ற விதவைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய காட்சி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசு

Published On 2020-01-18 18:28 GMT   |   Update On 2020-01-18 18:28 GMT
பொங்கல் விழாவை சிறப்பிக்கும் பொருட்டு, இந்த ஆண்டு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், ஆதவற்ற விதவை பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கியது.
கிரு‌‌ஷ்ணகிரி:

தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் விழாக்களில் முதன்மையானது பொங்கல் விழாவாகும். இந்த விழாவை அர்த்தமுள்ள வகையில் சிறப்பிக்கும் பொருட்டு, இந்த ஆண்டு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், ஆதவற்ற விதவை பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கியது. அதன்படி, கடந்த ஆண்டு கஜா புயலினால் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த 1200 ஆதரவற்ற விதவைப் பெண்களை தேர்வு செய்து தலா ரூ. 500 என ரூ.6 லட்சம் மதிப்பில் புடவைகளை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.

இது குறித்து ஐ.வி.டி.பி. நிறுவனரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் கூறுகையில், ஐ.வி.டி.பி.யின் கீழ் செயல்பட்டு வரும் 13 ஆயிரத்து 671 குழுக்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களின் சார்பாக இப்பரிசு வழங்கப்பட்டு, பொங்கல் வாழ்த்தை தெரிவித்தோம் என்றார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்டம் கலங்கரை தொண்டு நிறுவன இயக்குனர் அருட்தந்தை குழந்தைசாமி, பொருளாளர் அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் கலங்கரை தொண்டு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News