செய்திகள்
கே.எஸ்.அழகிரி

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி

Published On 2020-01-18 07:46 GMT   |   Update On 2020-01-18 07:49 GMT
கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசியதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவியது. 

இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர்  இன்று மதியம் அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். 



இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, திமுக-காங்கிரஸ் இடையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.

‘திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். கூட்டணியில் ஆரோக்கியமான விவாதம் வந்து செல்லும். 

இனி கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் எழுந்தால் நானும் மு.க.ஸ்டாலினும் பேசிக்கொள்வோம். மற்றவர்கள் யாரும் பேசத் தேவையில்லை. நடிகர் ரஜினிகாந்த், துக்ளக்குடன் முரசொலியை ஒப்பிட்டு பேசியது தவறு’ என கே.எஸ்.அழகிரி கூறினார்.
Tags:    

Similar News