செய்திகள்
கைது

பேரூராட்சி செயல் அலுவலரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காங்கிரஸ் நிர்வாகி கைது

Published On 2020-01-18 04:16 GMT   |   Update On 2020-01-18 04:16 GMT
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் செயல் அலுவலரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் செயல் அலுவராக பணியாற்றி வருபவர் ரமேஷ் (வயது 52). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜ்(68), தனக்கு ரூ.50ஆயிரம் பணம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முறைகேடுகள் நடந்துள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவேன் என்று மிரட்டியதுடன், ரமேசை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், பூலாம்பாடி பேரூராட்சியில் நடைபெறும் சில முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவரான சுந்தர்ராஜ், தகவல் அறியும் உரிமை சட்டப்படி சில தகவல்கள் கேட்டிருந்தார். அந்த தகவல்களை வழங்கினால் அங்கு பணிபுரியும் சில அதிகாரிகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், பணம் கேட்டு மிரட்டியதாக பொய் புகார் அளித்து கைது செய்துள்ளனர். இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.
Tags:    

Similar News