செய்திகள்
வண்டலூர் பூங்கா

காணும் பொங்கலையொட்டி வண்டலூர் பூங்காவுக்கு 56 ஆயிரம் பேர் வருகை

Published On 2020-01-18 02:32 GMT   |   Update On 2020-01-18 02:32 GMT
வண்டலூர் உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு தான் முதல் முறையாக காணும் பொங்கலுக்கு 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர் என்று பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியியல் பூங்காவுக்கு கடந்த 3 நாட்களில் 1¼ லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். பொங்கல் பண்டிகை தினமான 15-ந்தேதி, 20 ஆயிரத்து 978 பேரும், மாட்டு பொங்கல் பண்டிகையான 16-ந்தேதி, 43 ஆயிரத்து 658 பேரும், நேற்று காணும் பொங்கலையொட்டி 56 ஆயிரத்து 749 பேரும் பூங்காவுக்கு வந்தனர். கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 385 பேர் வருகை தந்துள்ளனர்

கடந்த 1985-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு தான் முதல் முறையாக காணும் பொங்கலுக்கு 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை பூங்கா இயக்குனர் யோகேஷ் சிங் தெரிவித்து உள்ளார்.

இதேபோல், கிண்டி சிறுவர் பூங்காவுக்கு நேற்று 10 ஆயிரம் பேரும், கடந்த 3 நாட்களில் 42 ஆயிரம் பேரும் வந்தனர். கிண்டி பாம்பு பண்ணைக்கு நேற்று 3 ஆயிரத்து 500 பேரும், 3 நாட்களில் 12 ஆயிரம் பேரும் வருகை தந்துள்ளனர்.

Tags:    

Similar News