செய்திகள்
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

கடலில் குளிக்க தடை: தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன - ஏ.கே.விஸ்வநாதன்

Published On 2020-01-17 19:09 GMT   |   Update On 2020-01-17 19:09 GMT
கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சென்னை:

பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான நேற்று காணும் பொங்கலை தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். 

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தளங்களில் நேற்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சென்னையில் குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் நேன்று மதியம் முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பொதுமக்களும் மிக மகிழ்ச்சியோடு சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். 

மெரினா கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரையைச் சுற்றிலும் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பொதுமக்களுக்கு உதவும் வகையில் மெரினா கடற்கரையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மெரினாவில் காணும் பொங்கல் கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போன 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News