செய்திகள்
முக ஸ்டாலின்

பெரியார் விருது வழங்கப்படாததை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் - சில மணி நேரத்தில் விருது அறிவித்த அரசு

Published On 2020-01-15 16:29 GMT   |   Update On 2020-01-15 16:29 GMT
பெரியார் விருது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், செஞ்சி ராமச்சந்திரனுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதை தமிழக அரசு அறிவித்தது.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், பெரியார் விருது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், செஞ்சி ராமச்சந்திரனுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதை தமிழக அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது. பெரியார் விருதுடன் ரூ. 1. லட்சம் ரொக்கமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News