செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த்

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து

Published On 2020-01-15 05:26 GMT   |   Update On 2020-01-15 05:26 GMT
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீட்டின் முன் இன்று வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர். காலை 9.40 மணிக்கு  வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த்  தனது ரசிகர்களுக்கு இரு கரம் கூப்பி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டார்.
Tags:    

Similar News